Pages

Thursday, May 10, 2012

நகைச்சுவை நாயகன்


ஏய் காற்றே!!
நீ தான் இந்த உலகத்தின் சிறந்த நகைச்சுவை நாயகனோ??
எந்த மாணுடனின் நகைச்சுவைக்கும் மதியாத மலர்கள்,
நீ வந்தால் மட்டும் தலை அசைத்து, ஆர்பரித்து மகிழ்ச்சியை வெள்ப்படுத்துகின்றதே!!

Sunday, March 18, 2012

மறதி!!!

உன்னை பார்த்த நாள், என் சுற்றத்தை மறந்தேன்..
உன் சிரிப்பை கண்ட நாள், உலக அதிசயங்களை மறந்தேன்..
உன் குரல் கேட்ட நாள், அமுத கானம் மறந்தேன்..
உன் கண் மீன்களை கண்ட நாள், வானம் கொண்ட வின்மீன்களை மறந்தேன்..
உன்னை சுவாசித்த நாள், என்னையே மறந்தேன்..

Photo illustration by Mindy Ricketts

இன்று மறக்க நினைக்கிறேன் உன்னை..
முடியாமல் வாட்டுகிறேன் என்னை..

மறப்பவனுக்கு மறந்தது, மறக்கும் திறன்…

Tuesday, March 6, 2012

எது அழகு??

கரிய பின்புறத்தில், தன் கிரணங்கலால் ஒளியை பெருக செய்யும் அந்த நிலவா??

அல்லது வெண்மையான பின்புறத்தில், மதி மயக்க செய்து, தன் கிரணங்கலால் காதலை பெருக செய்யும் என்னவளின் கருவிழியா??

Monday, February 27, 2012

தேன் சுவை தமிழ்

அடியே என் அகம் கவர்ந்த அழகிய தமிழே !!
உன்னை போன்ற கல்லியை ஈரேழு உலகிலும் காண முடியாது..
நாடு நகரம், காடு மேடு என மலர்களை தேடி சென்று தேன் திரட்டும் வண்டுகளுக்கு கூட தெரியவில்லை நீ தான் அந்த தேனின் ஊற்று என்று

இளையராஜா


வறண்ட பூமிக்கு வானம் தரும் இதம்  போல எங்கள் வாழ்வில் இசை தரும் நீ இளையராஜா அல்ல -  எங்கள் இதய ராஜா

Sunday, February 26, 2012

என் முதல் கவிதை :)

Image

காதலன் தன் காதலியின் சோகத்தை கண்டு கூறினான்...

நான் மட்டும் அல்ல, உணர்வுகளும் உண்னை நேசிக்கிண்ட்றன போல...

அதனால் தான் சோகம் உண்னை எப்போதும் பற்றி கொண்டு விட முடியாமல் தவிக்கிண்றது...